பக்கம் எண் :

278கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1325   ஏழை, பாவம், யாவ ரேனும்
வந்தால், கொஞ்சம் வாலை முறுக்குவார்;
அன்றி,
பதிவு சாக்ஷிப் பலவேசம் பிள்ளை
கூட்டாளிகளைக் கூட்டிற் கண்டால்,

1330   வாயைத் திறவார், மௌனம் கொள்வார்;
பேடியைக் கண்ட பீஷ்மரும் ஆவார்;
அண்டமம் கோழி அண்டமாய் விடும்;
உருட்டும் புரட்டும் ஒழிந்து போய்விடும்;
அண்ணன் எதற்கும் அஞ்ச வேண்டாம்;

1335   எதுவந் தாலும் யான்இருக் கின்றேன்;
என்னை,
அண்ணன் நன்றாய் அறிய மாட்டீர்,
இந்து லாவில் எழுத்துக்கள் இத்தனை,
மகம்மத லாவில் வரிகள் இத்தனை

1340   என்று சொல்ல எனக்குத் தெரியும்,
தி.பி.கோ.வைத் திருப்பித் திருப்பிப்
பாரா இரவும் பகலும் இல்லை.
சுருக்கி உம்மிடம் சொன்னால் போதுமே!
சட்ட மெனக்குத் தலைகீழாய்த் தெரியும்;

1345   நடைபடி யெல்லாம் நன்றாய் தெரியும்;
இரண்டு கையால் எழுதத் தெரியும்;
அரை நிமிஷத்தில் அநியா யங்கள்
ஐம்பதைக் கோர்ட்டில் ஆக்கத் தெரியும்;
பட்டிகை எழுதப் பாராம் போடக்

1350   கெட்டி கெட்டி என்றுபேர் கேட்ட
ஏட்டுக் குமஸ்தன் யானே யாவேன்.
சாடை காட்டிச் சாட்சிக ளுக்குத்
தெரியாக் காரியம் தெரியச் செய்ய
என்னைப் போல் இங்கு யாருண்டு? ஐயா!

1355   கட்சிகள் வந்து என் கையில் தந்த
பணத்தைச் சொந்தப் பணம்போல் எண்ணி