பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு279

Untitled Document

    வாங்கிப் பெட்டியில் வைத்துக் கொள்வேன்;
சிறிது மோசஞ் செய்திட மாட்டேன்;
வக்கீல் குமஸ்தன் சத்திய வாசகன்

1360   இன்னார் என்றுஇந் நாடெல்லாம் அறியும்.
ராஜியும் வேண்டாம், கீஜியும் வேண்டாம்;
நானே கேஸு நடத்தி, ஜயமும்
வாங்கித் தருகிறேன்; மலைக்க வேண்டாம்;
என்,

1365   வக்கீல் பேர்க்கு ஒரு வக்கா லத்தை
எழுதிப் போடும்" என்றெல்லாம் சொல்லி
இந்திர சாலம் மந்திர சாலம்
மகேந்திர சாலமும் வல்லஇம் மனிதன்
நாட்பண மாக நாலு ரூபாயும்

1370   வக்கா லத்தும் வாங்கிச் சென்றான்
'அர்ஜி கொடுத்தேன், அவதி மாற்றினேன்.
பிரதி யுத்தரமும் பேஷாய்க் கொடுத்தேன்.
கேஸில் ஜயமும் கிடைக்கும், நிச்சயம்'
என்று வார்த்தைகள் இதமாய்க் கூறி,

1375   இடையிடை ரூபாய் இருபது முப்பது
தட்டிக் கொள்வான்; (தலைவிதி! தலைவிதி! )
கொடுத்துவைத் தவர்கள் கொண்டு போனார்
என்விதி யானும் இப்படி யானேன்!
நாகைக் கோர்ட்டில் கேஸு நடந்தது;

1380   நடந்தது, நடந்தது, நாலரை வருஷம்!
ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே!
இரவும் பகலும் இன்றி என் கணவர்
பட்ட பாடெல்லாம் பகர்வதும் எளிதோ?
திங்கட் கிழமை தெரிசனம் போச்சு,

1385   திண்டாட் டங்கள் தீரா தாச்சு!
வெள்ளிக் கிழமை தெரிசனம் போச்சு,
விவகா ரங்கள் மிகவே யாச்சு!
குளியும் போச்சு, கும்பிடும் போச்சு,
கோர்ட்டு வாசல் குடியிருப் பாச்சு!