Untitled Document | 1390 | | மாதாந் தரங்கள் மறந்தே போச்சு வக்கீ லாபீஸ் வாழிடம் ஆச்சு! உயர்ந்த மேடை உறைவிடம் போச்சு, ஓட்டுத் திண்ணை உறங்கிட மாச்சு! மெத்தை திண்டு விதானம் போச்சு, | | 1395 | | விரிக்கும் பாய்அவர் மேல்முண் டாச்சு! துப்பட் டாவும் தொங்கலும் போச்சு! துவர்த்து முண்டும் துணியுமே யாச்சு! புட்டும் பழமும் காப்பியும் போச்சு, புளித்த காடியே போதுமென் றாச்சு | | 1400 | | தோசை இட்டலி தோய்ப்பனும் போச்சு, தொந்தியும் கரைந்து சுருங்குவ தாச்சு! சுகந்தத் தூளும் சோப்பும் போச்சு, சும்மா சிரங்கு சொறிவது மாச்சு, சீலைக் குடையும் செருப்பும் போச்சு, | | 1405 | | தினமும் வெயிலில் திரிவது மாச்சு! அரைவண் டியுமாடும் அனைத்தும் போச்சு, அஞ்ச லோட்டம் அவர்க்கே யாச்சு! மட்டிலாக் கவலை மனங்குடி கொண்டது, அளவிலாத் துன்பம் அடிமை செய்தது! | | 1410 | | ஐயோ! யாங்கள் அனைவரும் அந்நாள் அடைந்த துயரெல்லாம் யாரே அறிவார்? | | | | வேறு | | 1400 | | குலக்குறத்தி வரினுமொரு கோடங்கி வரினும் குறிகேட்டுப் பொருள்விரித்துக் கொண்டிருந்தோம், அம்மா! துலக்கமுறப் பரல் பரத்திச் சோசியர்கள் கணித்துச் | | | | | | 1415 | | சொன்னவைகள் உண்மை யென்று துணிந்திருந்தோம், அம்மா! | | |
|
|