பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு281

Untitled Document
1401 பதியிருக்கும் பதியெங்கும்
     பதிவாகச் சென்று
பால்வைத்துக் கணக்குகளும்
     பார்த்து வந்தோம், அம்மா!
கதிகிடைக்கும் எனக்காளி
     கொடை நடக்கும் காலம்
கடாத்தறித்துப் பொங்கலிட்டுக்
     காத்திருந்தோம், அம்மா!


1402 1420 குறத்திசொன்ன குறியெல்லாம்
     குறிதவறிப் போச்சே!
கோடங்கி குறியாலும்
     குணமில்லா தாச்சே!
நிறுத்துரைக்கும் நிமித்திகரின்
     நிமித்தங்கள் இந்நாள்
நினைக்கும்போ துளம் வெந்து
     நீறாகு தம்மா!

1403 பதித்தலத்துப் பால்வைத்தும்
பயனைடைந்தோ மில்லை!

1425 பலிகொடுத்தும் தேவி அருள்
     பாலித்தா ளில்லை!
விதித்தவிதி தான் இருக்க
     வேறுவிதி வருமோ!
விம்மியினி அழுவதெலாம்
     வீணலவோ அம்மா!

வேறு
1404 இப்பெரும் கஷ்டம் யாரே படுவர்
கணவர்

1430 அல்லும் பகலும் அலைந்து சடைந்தார்,
எலும்பும் தோலு மாக இளைத்தார்,
இருமல் இழுப்புக்கு இருப்பிடமானார்,
எதிலும் விருப்பம் இல்லாதானார்,
வெளியூர் போக்கை விட்டே விட்டார்,