பக்கம் எண் :

282கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1435   உள்ளூர் மட்டும் உலாவி வந்தார்;
சிலநாள் பின்னும் செல்லச் செல்ல
தெருவில் மாத்திரம் திரிவா ராயினர்;
படிபடி யாய்இப் படியவர் பாடு
குறைந்து குறைந்து கொண்டே வந்தது;

1440   அண்டை வீடாகி, அறைப்புரை யாகி,
படிப்புரை யாகிப் பாயிலும் ஆனார்;
எழுந்து நடக்க இயலாதானார்;
நடந்தவர் கீழே கிடந்தா ரம்மா!