பக்கம் எண் :

284கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1475   மக்களுக்கு என்றொரு வஸ்து வாகிலும்
கொடுத்தது மில்லை, குடியிருப்பதற்கு
வீடும் அவர்க்கு வேறிலை, அப்பா!
தங்கத்தை நீயே தாலி கட்டினால்,
கவலையின்றிக் கட்டையை விடுவேன்.

1480 அவளும் சமைந்து ஈராண்டுகள் ஆச்சது;
கண்ணால் உங்கள் கல்யா ணத்தைக்
காண்பனோ? தெய்வ கடாக்ஷம் எப்படியோ!
அத்தைமார் இவர்கள் அல்லும் பகலும்
படும்பா டுகள்நீ பார்க்க வில்லையோ?

1485 அப்பா! இவரை ஆதரித்து என்றும்
காப்பாற் றுவது உன் கடமை யல்லவோ?
பயலையும் நீகண் பார்த்துக்கொள், ஐயா!
படிப்பான் கருத்தாய், பணந்தான் இல்லை;
பரிக்ஷை கொடுத்துப் பாஸாய் வரஇனும்

1490   ஐந்து வருஷம் ஆகும். அப் பொழுதுஉன்
தங்கை வயது சரியாய் வந்திடும்
மேற்கரி ரியம்உன் விருப்பம் போலச்
செய்து கொள், நீ தெரிந்தது தானே?
இந்த

1495 ஊரி லுள்ள ஒருபய லாவது?
நல்லவன் என்றுநீ நம்பி விடாதே.
கொஞ்சம் இடம்நீ கொடுத்தா யானால்,
உள்ளதை யெல்லாம் ஒன்றில் லாமல்
கொள்ளை யடித்துக் கொண்டுபோய் விடுவான்.

1500 நச்சு வித்துகள்! நச்சு வித்துகள்!
நம்பல் ஆகாது! நம்பல் ஆகாது!
என்னடா, அப்பா? என்ன செய்யட்டும்?
வயித்தியன் ஒழுங்காய் வருகிறா னில்லை;
தக்க மருந்தும் தருகிறா னில்லை;

1505   பணம்பணம் என்று பதைத்துச் சாகிறான்,
எழுந்திருப் பதுவும் இனியிலை; ஆயினும்,