பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு285

Untitled Document
ஆட்டு லேகியம் கூட்டித் தின்றால்
சுகம்வரு மென்று சொல்லுகிறார்கள்;
கையிற் பணமில்லை, கடன்தரு வாரிலை;

1510 வழக்கில் முதலை வாரி யெறிந்தேன்;
கிழக்கு மேற்காய்க் கிடக்கின்றேன் இதோ!
என்ன செய்யலாம்? யாரை நோகலாம்?"
என்று இம்மொழிகள் இசைப்பது கேட்டு அவர்
கூடப் பிறந்து உயிர் கொள்ளும் வியாதிபோல்,

1515 அருமை மதினி ஆங்கார வல்லி
காந்தாரி யம்மை கடுகி வந்தாள்,
மகனை நோக்கி, "மடையா, மூடா!
முருக்குத் தடிபோல் வளர்ந்தமுட் டாளே!
ஐயா உன்னிடம் சொல்லி அனுப்பின

1520 செய்திகள் என்ன? நீ செய்வதிங்கு என்ன?
நீயும்,
ஆண்பிள்ளை யோடா? அவலட் சணமே!
அத்தைமார் கூட அழஇருந் தனையோ?
அவர்,

1525 கைவிஷம் கொடுத்துக் கணவனைக் கைவசம்
ஆக்க நினைத்த அரக்கிகள் அல்லவோ?
வருஷம் ஐந்தாய் வழக்கும் சண்டையும்
மூட்டி விட்ட முண்டைகள் அல்லவோ?
நினைத்த காரியம் நிமிஷம் முடிப்பரே!

1530 மாய வல்லிகள் வலையில் நீயும்
விழுந்துவிட் டாயோ? வெட்கம்! வெட்கம்!
போதும் எழுந்திரு! போதும்! போதும்!
அரங்குக் கதவை அடைத்துப் பூட்டிவை ;
தட்டுக் கதவையும் சங்கிலி யிட்டுவை;

1535 சாய்ப்புக் கதவிலும் சங்கிலி யிட்டுவை;
பொதிய மலையும் பொட்டண மாகி
புழைக்கடை வழியாய்ப் போய்விடும், அப்பா!
ஐயா வரும்வரை அங்கே நீதான்
கருத்தாய் நின்று காத்திட வேண்டும்.