பக்கம் எண் :

290கவிமணியின் கவிதைகள்

Untitled Document
மக்கள் வழியென மதிக்கவொண் ணாது;
மருமக் கள்வழி யாகவு மாட்டாது;
1680   இருவழி கட்கும் இடைவழி யாய்வரும்
வழியிது போல்இவ் வையகத்து எங்கும்
உண்டோ? அம்மா! உண்டோ? அம்மா!
வீடு விற்று விளைநிலம் விற்று,

1685 குடிக்கும் செம்பு குழியலும் விற்று,
பாத்திரம் பண்டம் பலவும்விற்று,
தண்டை பாத சரங்களும் விற்று,
காப்புக் காறை கடுக்கனும் விற்று,
பதக்கம் சிற்றருப் பாம்படம் விற்று,

1690   தாலியை விற்றுப் பீலியை விற்று,
வக்கீல்சாமி மலரடி களிலும்
குமாஸ்தா மாடன் கோவில் களிலும்
சாக்ஷித் தெய்வச் சன்னிதி களிலும்
பழந்தேங் காய்கள் படைப்புகள் வைத்தும்,

1695 வேண்டிய புகையிலை வெற்றிலை வைத்தும்
விதம்விதம் வேட்டிகள் முண்டுகள் வைத்தும்,
சேலை தாவணி சீட்டிகள் வைத்தும்,
இன்னும் பலவாறு இவர்க ளிடத்து
முன்னம் கொண்ட கடன்களை முற்றும்

1700 குறைகூறாது கொடுத்தும் முடிவில்
வழக்கை இழந்து வாய்மண் ணாகி,
உண்ண உணவும் உடுக்கத் துணியும்
இல்லா தாகி, யாரும் கைவிட,
முற்றத் துறந்த முனிபுங் கவர்போல்

1705   பக்கப் பழுத்த பட்டினத் தடிகள்போல்
"உற்றார் சதமல, பிள்ளையும் சதமல,
இப்பே ருலகில் யாரும் சதமல"
என்று கூறி இனித் தோவாளைக்
1710 கஞ்சிப் புரையே கதியெனச் சென்று,
பக்க மெங்கும் பரந்து சுற்றிச்