பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு289

Untitled Document
11 கும்பியெரிச்சல் படலம்
................................................
...................................................
....................................................
1406 1649   தீரா வழக்கும் சென்மப் பகையும்
உற்றா ருக்குள் உண்டாக்கும் வழி
அப்பனைப் பிள்ளை அண்டவொட் டாவழி
பிள்ளையை அப்பன் பேணவொட் டாவழி
புருஷனை மனைவி போற்றவொட் டாவழி
மனைவியைப் புருஷன் மதிக்கவொட் டாவழி
1655 அண்ணனைத் தம்பி அடுக்கவொட் டாவழி
மருமகனை மாமன் வஞ்சித் திடுவழி
மாமனை மருமகன் வதைத்துக் கொழும்வழி
குடியை முடிக்கும் கொடிய தீவழி
1660 அடிபிடி சண்டை அகலாப் பாழ்வழி;
மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி;
எண்ணும் படியுடல் என்பெலாந் தெரியக்
கண்ணும் குழிந்து கன்னமும் ஒட்டி
வயிற்றுக் கின்றி வறுமையின் மெலிந்து,

1665   என்போல்
நடைப்பிணம் ஆயிரம் நடக்கும் வனவழி;
வெவ்வழி, சற்றும் வெளிச்ச மிலாவழி
இருள்வழி செல்பவர் இடறும் கல்வழி
கூகையும் ஆந்தையும் குடிகொள்ளும் குகைவழி
1670 நெஞ்சில் படர்ந்து நிரம்பிய முள்வழி;
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ'மென்று
ஒளவை சொல்மொழி அறியா மடவழி;
பெற்ற பாவமும் பற்றிய நோயும்
1675 அழியாப் பொருள்களாய் அளிப்ப தன்றி,
ஒருகா சேனும் உதவாச் சதிவழி!
இது,