பக்கம் எண் :

288கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1605 நாஞ்சி னாட்டில் நடப்பவை யெல்லாம்
அதிசயம்! அதிசயம்! அதிசயம், அம்மா!
பாவம்! சாமியும் சுவரிற் சாய்ந்து, கண்ணீர் மாலை
மாலையாய் வடித்தங் கிருந்தான்.
இந்தச் சமயம், எங்கள்புண் ணியத்தால்,

1610 உலகெலாம் புகழும் உமையொரு பாகத்
தேசிகன் பாற்சிவ தீக்ஷை பெற்றவர்
நெற்றி நிறைந்த நீற்றுப் பூசினர்
கழுத்து நிறைந்த கண்டிகை யணிந்தவர்
உலந்து பழுத்த உடையை உடுத்தவர்

1615   தளர்ந்த நடையினர் சாந்தம் உடையவர்
கண்டவர் தொழத்தக காட்சி கொண்டவர்
மாணிக்க வசகர் வழங்கிய மணியெல்லாம்
பேணித் தம்உளப் பெட்டியில் வைத்துத்
தினந்தினம் எம்மான் திருவடி சார்த்திப்

1620   பணியுந் தொண்டர் பாக்கியம் பிள்ளைப்
பட்டா வந்தனர்; படிப்புரை யிருந்தவர்
வேண்டிய காரியம் விளம்பக் கேட்டு,
உரைத்த நாத்தேன் ஊறி யெழவும்,
உள்ளமும் செவியும் ஒருங்கு குளிரவும்,

1625 திருத்த மாகத் திருவாச கத்தில்
பற்பல பதிகமும் பண்ணோடு ஓதினர்;
இப்படி அவரும் யாத்திரைப்பத்தில்,
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் சால்புவே"

1630 என்ற பாகம் எடுத்துக் கூறவே,
கணவர்
ஏங்கி யழுத எங்களை நோக்கினர்,
வாடி யழுத மக்களை நோக்கினர்,
கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்;
1635 கண்ணை மூடினர், கயிலைபோய்ச் சேர்ந்தனர்.