பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு287

Untitled Document
பயலும் அதனைத் திறந்து பார்த்தான்.
'ஆரே தமிழை அறிபவர்?' என்றான்
'பள்ளியில் தமிழும் படித்தேனோ?' என்றான்;
1575 'பரிக்ஷையில் தமிழொரு பாடமோ?' என்றான்;
'என்னால் படிக்க இயலாது' என்னச்
சுவரிற் சாய்ந்து சும்மா இருந்தான்.
ஐயோ!
அப்பன் மரணம் அடையுங் காலம்

1580   எமவே தனைகள் இல்லா தாக்கவும்,
சிந்தை சிவனடி சேரச் செய்யவும்,
செந்தமிழ் மறையாந் திருவா சகத்தைப்
பக்க மிருந்து படிக்க அறியா
மக்கள் படிப்பை வையகம் மதிக்குமோ?

1585 நாஞ்சி னாட்டில் நல்லஆண் பிள்ளை
இல்லா ததனால் இப்படி யாச்சுது!
மலையா ளத்தில் வரைந்திடும் கோர்ட்டு
சமன்ஸு வந்தால் சரியாய்ப் படித்துக்
காட்டுவ தோபெருங் காரியம் அம்மா?

1590 ஈசன் கழலுக்கு எமையா ளாக்கும்
புண்ணிய நூல்களைப் புறக்கணித் திடுதல்
அறிவோ? அழகோ? ஆண்மையோ? அம்மா!
பண்டு தொட்டுப் பரம்பரை யாக
முன்னோர் வைத்த முழுமணிப் பூணெலாம்

1595 ஆசை யோடணிந்து அழகுபா ராமல்,
பாசிக் காகவும் பளிங்குக் காகவும்
கூச்ச மின்றியோர் குச்சுக் கடை போய்க்
காத்துநிற் பவரைக் காசினி கண்டு
சீசீயென்று சிரித்தி டாதோ?

1600 பைத்திய மென்று பழித்திடாதோ?
அன்னை யாக்கிய அமுதினை உண்ணாது
அண்டை வீட்டுக் கூழை யலந்து
வாரி யுண்டு வயிறு நிரப்பும்
மதியும் என்ன மதியோ? அம்மா!