| 1415 | | பத்துத் தலையுள்ள ராவணரோ? - பெரும் பங்கு நீர் கேட்ட முறையும் ஏதோ? சொத்துக் குரியரும் நீவிரேயோ; - நாங்கள் தோட்டப் புழுக்களோ? சொல்லும் ஐயா? |
| 1416 | | உள்ள வகையெல்லாம் உங்களுக்கோ? - நாங்கள் உண்ணாத சோறும் உமதேயோ? கள்ள வழக்குஇனிச் செல்லாதையா! அந்தக் காலமும் சென்று கழிந்ததையா! |
| 1417 | | பண்ணை முழுவதும் உமக்கானால் - எம்மைப் பத்திரம் ஒப்பிடத் தேடுவதேன்? கண்ணை விழித்துநீர் கண்டீரோ? - இந்தக் காலத்தின் போக்கும் உணர்ந்திடீரோ? |
| 1418 | | சீறிப் பறித்தெங்கள் வாயமுதை - உங்கள் செல்வர்க் களிப்பது அழகாமோ? தேறித் தெளிந்த பெரியவரே! - இது தெய்வம் பொறுக்கும் செயல் ஆமோ? |
| 1419 | | தேடிய தேட்டம் அளித்த தெல்லாம் - உங்கள் செல்வச் சிறுவர்க்கும் போதாதோ? கூடஇப் பங்கும் பிடுங்கி அவர்க்குக் கொடு்த்திட உள்ளம் துணிந்தீரோ? |
| 1420 | | நெற்றி வியர்வை நிலத்தில் விழ - நீரும் நித்தம் உழைத்தது எமக்கேயோ? பற்றிலா நெஞ்சம் படைத்தவரே! - பெரும் பங்குநீர் கேட்கும் முறையும் ஏதோ? |
| 1421 | | கட்டி உழுவதும் மக்களுக்காம் - அந்தக் காளைக்கு வைக்கோல் குடும்பத்திலாம்; சட்டம் இதுநல்ல சட்டம், ஐயா! - எந்தச் சாத்திரம் கண்டு படித்தீர் ஐயா! |
| 1422 | | குண்டுரம் தோட்டக் குழைகளை - நீரும் குடும்ப வயலில் இடுவதுண்டோ? உண்ட உணவுக்கு வஞ்சகம் செய்பவர் உம்மைப் போல் இந்த உலகில் இல்லை. |