1423 | | பண்டம் பொருளெலாம் கொள்ளை கொண்டீர் மேலும் பங்கும் அதிகமாய் வேண்டுகின்றீர்; சண்டைக்கும் நல்ல கொடி கட்டினீர் - இது சற்றும் உமக்குத் தருமோ? ஐயா! |
1424 | | கொள்ளிக் காசன்றிஉம் மக்களுக்கு - எங்கள் குடும்ப வகையில் உரிமை உண்டோ? அள்ளிப் பெரும்பங் கெடுத்தவர் கையில் அளிப்ப துமக்குச் சரியாமோ? |
1425 | | சாகை சாகை என்று சத்தமிட்டீர் - அந்தச்; சாகைகள் தம்முள்ளே ஒப்பதுண்டோ? ஊகமாய்த் தாவர நூலைப் படித்து - அதன் உண்மை வழிகண் டொழுகுவீரே |
1426 | | ஆறு பிஞ்சுள்ள தொருகிளையாம் - மற்றது ஆயிரம் கொண்ட பெருங்கிளையாம்; ஏறும் உணவுப் பொருளினை - இம்மரம் எப்படிப் பங்கிடும்? செப்புவீரே |
1427 | | சாகைப் பாகம் அனியாயப் பாகம் - அது சண்டைகள் மூட்டும் சழக்குப் பாகம் நோக மனதைப்புண் ணாக்கும் பாகம் - ஒரு நூல்வழி சென்றிடா நொண்டிப் பாகம் |
1428 | | இருந்தும் இறந்தவர் ஆக்கும் பாகம் - எம்மை ஏழைக ளாக்கத் துணியும் பாகம்; திருந்தும் அறிஞர் இகழும் பாகம் - நன்மை சேராத பாகம் அச் சாகைப் பாகம். |
1429 | | சாகைப் பாகம் சட்ட மாக்குவதே - எங்கள் சாவுக்குத் தூது விடுவது, ஐயா! காகமாய் எங்கும் பறந்து திரிந்து - இன்னும் காலம் கழிப்பது கஷ்டம், ஐயா! |
1430 | | சட்டம் தெரிந்தவர் கூறும் பாகம் - தர்ம சாத்திர சம்மத மானபாகம்; திட்டமாய்ச் செல்வம் வளர்க்கும் பாகம் - நாங்கள் செப்பும் தனித்தனிப் பாகம், ஐயா! |