1431 | | பாடு படவழி காட்டும் பாகம் - கல்விப் பட்டங்கள் பெற்றிடச் செய்யும் பாகம், கூடிய சோம்பலை ஓட்டும்பாகம் - நீங்கள் கூறும் தனித்தனிப் பாகம், ஐயா! |
1432 | | இட்டமாய் யாவரும் வேண்டும் பாகம் - எம்மை இராசாக்க ளாக்கி இருந்தும் பாகம்; கட்டமெலாம் அற நீக்கும் பாகம் - நாங்கள் காட்டும் தனித்தனிப் பாகம், ஐயா! |
1433 | | வாழ்வின் பொறுப்பை உணர்த்தும் பாகம் - எம்மை வம்பு வழக்குகள் போக்கும் பாகம்; தாழ்வினை யெல்லாம் அகற்றும் பாகம் - நாங்கள் சாற்றும் தனித்தனிப் பாகம், ஐயா! |
1434 | | வோட்டுக் குரியவ ராக்கும் பாகம் - எம்மை ஊரார் மதித்திடச் செய்யும் பாகம்; நாட்டுக்கு நல்வழி காட்டும் பாகம் - நாங்கள் நாட்டும் தனித்தனிப் பாகம், ஐயா! |
1435 | | செம்பாக மாகிய பாகம் இது; - காலம் சென்றாலும் கைத்திடாப் பாகம் இது; வம்பாக நீர்கெட்டுப் போக வேண்டாம் - எங்கள் வார்த்தையில் நம்பிக்கை கொள்ளும் ஐயா! |
1436 | | சாட்சி களைத்தேடி ஓடவேண்டாம் - வக்கீல் சாமிக்குத் தட்சிணை வைக்க வேண்டாம்; ஆட்சிப் பொருளெலாம் விற்கவேண்டாம் - ஏழை ஆண்டி பரதேசி யாக வேண்டாம். |
1437 | | கோர்ட்டு வாசல் சென்று காக்க வேண்டும் அங்கே குள்ள நரிபோல நிற்கவேண்டாம்; ஏட்டுக் குமஸ்தாவைக் காண வேண்டாம் - ஜட்ஜி ஏச்சுக் கேட்டுள்ளம் எரிய வேண்டாம். |
1438 | | ஊர்வகை ஆயிரம் கோட்டை நிலம் - பக்கத்து உள்ளதனால் எமக்கு என்ன பயன்? ஓர்பிடிச் சோற்றுக்கு உதவிடுமோ? - அதன் உண்மையும் நீர் அறியாததுவோ? |