பக்கம் எண் :

296கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1439   கூட்டக் குடும்பங்கள் வேண்டாம், ஐயா! - இனிக்
கும்பி பொறுக்கவும் மாட்டாது, ஐயா!
பாட்ட நிலமும் கிடையாது, ஐயா! - எங்கள்
பாகத்தைப் பங்கிட்டுத் தாரும், ஐயா!

1440   ஆறு சென்டு பூமி போதும், ஐயா! - சொந்தம்
ஆனால் அதுவும் ஆறு ஏக்கர், ஐயா!
சோறுதந் தெங்களைக் காக்கும், ஐயா! - அது
சொன்ன படிக்கும் விளையும், ஐயா!

1441   காப்பிக் கடைபோக வேண்டுமென்றால் - எங்கள்
கையில் அரைக்காசும் உண்டோ? ஐயா!
தாப்புத் தரிப்புவே றில்லை, ஐயா! - பங்கைத்
தந்துவிட்டால் வெகு புண்யம், ஐயா!

1442   பங்கும் கடைசியாய்ச் செய்யும் பங்காம் - இதில்
பட்ச பாதம் செய்ய நீதி உண்டோ?
தங்கும் புதுச் சட்டம் வந்திடுமேல் - உங்கள்
சந்ததி நாங்களும் ஆகுவமோ?

1443   வீரியப் பேச்செலாம் விட்டுவிடும் - உள்ள
வீதம் பகிர்ந்து கொடுத்துவிடும்;
சூரியன் மேற்கே உதித்திடினும் - எங்கள்
சொத்து அவகா சங்கள் போய்விடுமோ?

1444   நல்லவர் உண்மை நடுநிலை - யுள்ளவர்
நாட்டிற் பெரியவர் நம்வழக்கில்
நெல்இதுசாவி இதுவெனக் - கண்டுஇனி
நிறுத்தவர் நீதி அறிந்திடுவோம்.