பக்கம் எண் :

298கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1451 சின்னஞ் சிறுமருப் பாறுளதாய்க் - காம
தேனுவின் பால்நிறம் பெற்றுள்ளதாய்,
மன்னும் மதவேழம் போன்றிடுமீன் - இந்த
வையம் ஒளிர ஒளிவிடுமீன்.
7
1452 விண்ணகம் விட்டு விரைந்திறங்கி - வரும்
வீதி யெலாம்ஒளி வீசிவந்து,
மண்ணகம் வாழ வலந்திரிந்து - தேவி
மாயை வயிற்றில் புகுந்ததுவே.
8
வேறு
1453 வலமருங்கில் விண்மீனும் வயிற்றில் பாய
மாதேவி துயிலுணர்ந்து மகிழ்ச்சி யுற்றாள்;
உலைவறியாத் திருவருளை வியந்து றின்றாள்;
ஒருதாயுங் கண்டறியா இன்பங் கண்டாள்.
9
வேறு
1454 காலைக் கதிரோன் உதிக்குமுன் - ஆசிய
கண்ட மெலாம்ஒளி கண்டதுவே;
வேலைத் திரைகள் அடங்கினவே - திசை
வெற்புகள் நின்றுகூத் தாடினவே.
10
1455 பட்ட மரங்கள் தளிர்த்தனவே - எங்கும்
பாழ்ங்கிண றும்ஊறிப் பொங்கினவே;
திட்டுத் திடர்மணற் காடும் - சுடுகாடும்
சில்லென்று பூத்துச் சிலிர்த்தனவே.
11
1456 சீரிய ஓடை குளங்களிலே - நல்ல
செந்தா மரைகள் மலர்ந்தனவே;
பாரிலே அவ்விராக் கண்ட - புதுமையைப்
பாடிட வல்லவர் யாரேயம்மா!
12
வேறு
1457 ஓண்சுடர் உலகில் உதித்தெழு காலை
மன்னிருட் சோலையோர் பொன்னிறம் பொலிய,
நிரந்தொளி பரந்து நிறைவது போல,
மாயையின் மனத்தெழு மகிழ்ச்சியும் பொங்கி