முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 299 |
Untitled Document | | இடைவெளி யின்றி எவ்வெவ் வுலகும் பாதல மீறாப் படர்ந்து சென்றது; "பிறந்திட இறந்தீர்! இறந்திடப் பிறந்தீர்! எழுமின்! எழுமின்! யாவரும் எழுமின்! புத்த பெருமான் புவியில் உதித்தனன்; அவனை வணங்குமின்; அவன்வழி பற்றுமின்; அவனுரை கேண்மின்; அழிமனம் ஒழிமின்; நலமுறு மெனவே நம்பி நாடுமின்; உள்ளந் தெளிமின்; உறுதி கொண்மின்; உய்யும் வழிஈது; உண்மையும் ஈதாம்; என்னும் மொழிகள் எவ்வெவ் விடத்தும் மந்திர மொழிகளாய் வந்தெழக் கேட்டனர். அதனால், அமைதி நிலவி, அன்பு தழைத்துக் குவலய முழுதும் குதுகல முற்றது. கடலும் மலையும், காடும் மேடும், பூவுல கறியாப் புதுமணம் கமழ, இனிய தென்றல் எழுந்து வீசியது. மறுநாட் காலை மகிழ்ச்சி மிகவே கற்ற பெரியோர் கனவின் பயனைக் கொற்றவன் அறியக் கூறியது இதுவாம்; | 13 | 1458 | | "பாரரசி கண்டகனா நற்கனாவாம்; பானுவுமே கற்கடக மனையில் நின்றான்; சீரமையும் ஆண்மகனைப் பெறுவாள்; அந்தச் செல்வமகன் தெய்வீக மகனே யாவான் ஓருமுயர் ஞானகுரு வாகி எங்கும் உண்மையுப தேசங்கள் செய்வான்; வேண்டின் வாரிதிசூழ் புவிமுழுதும் ஆள்வான்; அன்னோன் மகிமையெலாம் எடுத்துரைப்பது எளிதோ? ஐயா!" | 14 |
| |
|
|