பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு303

Untitled Document
1471 கோல மிட்டார்கொடி தூக்கிவிட்டார் - உயர்
கோபுரம் எங்குமே தீபமிட்டார்;
சாலை கடை கோயில் வீதியெலாம் - மலர்த்
தாமங்களால் பந்தல் செய்துவைத்தார்.
27
1472 பக்தியாய்ப் பூரண கும்பம்வைத்தார் - முளைப்
பாலிகைப் பக்கம் பொலியவைத்தார்;
குத்து விளக்குகள் ஏற்றிவைத்தார் - முத்துக்
கோவைகள் எங்குமே தொங்கவிட்டார்.
28
1473 தேகப் பயிற்சிகள் காட்டிடுவார் - சிலர்
செப்படி வித்தைகள் செய்திடுவார்;
வேக அரவைவிட் டாட்டிடுவார் - சிலர்
விண்ணில் வடங்காட்டித் தாவிடுவார்.
29
1474 வாளினை வீசி விளையாடுவார் - சிலர்
மாறியெழும் ஊஞ்சல் ஆடிடுவார்!
தாளிற் சதங்கை இசைதரவே - பல
தாசிக ளும்சதிர் ஆடிடுவார்.
30
1475 மானைப்போல் வேடமிட் டாடிடுவார் - சிலர்
வன்கரடி யாட்டம் ஆடிடுவார்;
கானப் புலியைப் பழக்கி - விளையாட்டுக்
காட்டிடு வார்நகர் வீதியெலாம்.
31
1476 மல்ல யுத்தம்சிலர் செய்திடுவார் - கோழி
வாத்துக்கள் சண்டைக்கு விட்டிடுவார்;
வெல்லுந் தகர்களைத் தாக்கவிட்டுச் - சுற்றி
வேடிக்கை பார்த்துக் களித்துநிற்பார்.
32
1477 ஒத்த குழலிசை ஊதிடுவார் - கசிந்து
உள்ளம் உருகவே பாடிடுவார்;
மத்தளம் கொட்டித் தலையசைப்பார் - வீணை
வாசித் தமுதம் வடித்திடுவார்.
33
1478 தேசம் புகழும் குலவணிகர் - மன்னன்
செல்வக் குமரனைக் கண்டிடவே,
ஆசை யெழத்தங்கத் தாலங்களில் - பல
அற்புதப் பண்டங்கள் ஏந்திவந்தார்.
34