Untitled Document 1499 | | "உயிரைக் கொன்றிடவே - முயலும் ஒருவ னுக்குஅந்த உயிரின் மேலேதும் - உரிமை உண்டோ? கூறும் ஐயா! | 55 | 1500 | | உயிரைக் காப்பவனே - என்றும் உயிர்க்கு உடையவனாம்; அயர்வு வேண்டாம் ஐயா! - இதுவே அறநூல் விதி ஐயா! | 56 | 1501 | | இன்னும் வீண்வாதம் - பேசி இருப்பதேன் ! ஐயா! அன்னம் சித்தார்த்தன் - பொருளாம் ஐய மில்லை, ஐயா!" | 57 | 1502 | | என்று நீதி எடுத்துண ரச்செய்து மன்றி லிருந்து மாயமாக மறைந்து போயினன்; மறையும் அந்நேரம், பையர வொன்று பதுங்கி அவ்வழி ஊர்ந்து செல்வதை ஒருவன் கண்டனன்; சிற்சில காலை தேவரும் இந்த வடிவந் தாங்கி வருவதுண்டு என்பரால்! யாதோ உண்மை? யாவரே அறிவார்? | 58 |
| |
|
|