Untitled Document இவள் "எனக்குப் பரிசெதும் ஈவதற்கு? இல்லையோ?" என்று கூறி இன்னகை புரிந்தனள். "இருந்த பரிசுகள் யாவும் போயின; ஆயினும், மாநகர் போற்றும் மங்கையர் மணியே! இதனைப் பரிசாய் ஏற்றுக் கொள்" எனத் தன், மார்பிற் கிடந்த மரகத மாலையைக் கழற்றி யசோதரைக் கன்னியின் அழகிய திருவரை சுற்றிச் சேர்ந்துக் கட்டினன். கட்டவே, கண்களும் கண்களும் கலந்து பேசின. கண்களும் கண்களும் கலந்து பேசின பேச்சில் பிறந்தது காதலே. | |
|
|