பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு317

Untitled Document
4. சித்தார்த்தன் கேட்ட தேவகீதம்
     (ஒரு நாள் சித்தார்த்தன் யசோதரையின்      அந்தப்புரத்தில்
அமர்ந்திருக்கிறான். அழகிய வீணையொன்று ஒருபுறத்தில் இருக்கிறது.
காற்று வீசும் பொழுது    அந்த வீணையிலிருந்து ஒலி உண்டாகிறது.
அந்த ஒலியில் கலந்திருக்கும் தேவகீதம் சித்தாத்தனுடைய  செவிக்கு
மட்டும் கேட்கிறது.       தேவகீதத்தில் பொதிந்துள்ள விஷயத்தைப்
பின்வரும் பாடலில் காணலாம்.)
1504 தேடும் இடங்களெல்லாம் - ஓய்வு
தேடியும் காணாமல்
ஓடி ஓடி அலையும் - காற்றின்
ஒலியே நாங்கள், ஐயா!
60
1505 ஆன்ற புவிவாழ்வும் - எண்ணில்
அற்ப வாழ்வேயாம்;
தோன்றும் ஒருமூச்சாம் - புயலாம்
சூறா வளியேயாம்.
61
1506 இந்த உயிர்களெல்லாம் - பிறக்கும்
இடமும் எவ்விடமே?
இந்த உயிர்களெல்லாம் - மீள
ஏகும் இடம் எதுவோ?
62
1507 எங்கிருந்து வந்தோம்? - நாங்கள்
எதனுக் காகவந்தோம்?
இங்கிவ் உண்மையெலாம் - அறிவார்
எவரு மேயுண்டோ?
63
1508 ஒத்த பிறப்பாகும் - நாங்களும்
உங்களைப் போல,
சுத்த சூனியத்தில் - நின்று
தோன்றிய ஆவிகளாம்.
64
1509 மாறி வருந்துயரால் - இன்ப
வாழ்வே நமக்கு இல்லை;
தேறும் அறிஞனே நீ - உண்மை
தெரியக் கூறுகின்றோம்.
65