பக்கம் எண் :

318கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1510 நித்திய ஆனந்தத்தை - அரசே!
நீயும் அடைவதுண்டோ?
சித்தத் தெளிவுடையாய் - சிறிது
சிந்தனை செய்திடுவாய்.
66
1511 அன்பு இருக்குமெனில் - அதிலும்
அளவ றியவொண்ணா
இன்பம் எய்திடலாம் - ஐயம்
யாது மேயில்லை.
67
1512 கண்ட வாழ்விதுதான் - நிலையாக்
காற்றின் வாழ்வேயாம்;
கொண்ட தந்தியின்மேல் - எழும்
குரலே போன்றதுவாம்.
68
1513 சால வேஉலகம் - துயரால்
தளர்ந்து வாடுதையா!
மாலை மாலையாக் - கண்ணீர்
வடிய விடுகுதையா!
69
1514 வாழ்வு மாயமெனும் - உண்மை
மனத்திற் கொள்ளாமல்,
நாளும் நைந்திடுதல் - எமக்கு
நகைப்பே தருகுதய்யா!
70
1515 நீல மேகந்தான் - ஆணையால்
நிலையில் நின்றிடுமோ?
தாலத் தோடும்நதி - கையால்
தடுக்க மாறிடுமோ?
71
1516 துன்பச் சுழியிலே - விழுந்து
சுழலும் உலகத்தை
இன்பக் கரையேற்ற - நீயும்
இரங்கிட வேண்டும்.
72
1517 வையம் முழுவதையும் - காக்க
வந்திங் கவதரித்த
ஐயனே! ஆளுதற்குக் - காலம்
அணுகி வருகுதைய்யா!
73