பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு319

Untitled Document
1518 'என்று வந்திடுவான் - ரக்ஷகன்
எவ்விடம் தோன்றிடுவான்'
என்றுஇப் புவியெலாம் - நோக்கி
எதிரே நிற்குதைய்யா!
74
1519 கண்ணிலா உலகம் - இடறிக்
கவிழ்ந்து வீழாமல்,
அண்ண லேஎழுந்து - விரைவில்
அருள வேண்டுகின்றோம்.
75
1520 இன்னும் தூங்காமல் - வெளியில்
இறங்கி வந்திடுவாய்
அன்னை மாயைதரும் - இனிய
அரசிளங் குமார!
76
1521 ஓய்வு கண்டிடவே - எமைப்போல்
ஓடி ஓடி அலைவாய்;
தாயும் தந்தையுமாய் - உலகைத்
தாங்க வந்தோனே!
77
1522 உலகின் உண்மையை நீ - இன்னும்
உணர்ந்திட வில்லை,
அலகில் கருணையால் - உயிரை
ஆள வந்தோனே!
78
1523 அன்ப ருக்காக - ஆசை
அறுத்திட வேண்டும்;
துன்பம் நீங்கிடவே - அரசும்
துறந்திட வேண்டும்.
79
1524 மாயப் பொய்மைகளைக் - கண்டு
மயங்கி டாதே, ஐயா!
நேய மாகஉண்மை - நாங்கள்
நிகழ்ந்த வந்தோம், ஐயா!
80