| | வேறு | |
1551 | | இத்தனையும் கண்டுமனம் இரங்கி, நொண்டும் இளமறியை இருகரத்தின் எடுத்து, வையம் அத்தனையும் தாங்குபுயம் அணிய ஏந்தி, அருளுருவாம் அண்ணலும் அத்தாயை நோக்கி;
| 107 |
| | வேறு | |
1552 | | “அல்ல லுறவேண்டாம் - இனித்துயர் ஆறி வருவாயம்மா! செல்லு மிடத்தில் உன்தன் - மதலையைத் சேர்த்து விடுவேனம்மா. | 108 |
1553 | | ஏழைப் பிராணிகளின் - இடர்களைந்து இன்ப மளிப்பதுபோல், வாழும் உலகிதனில் - செயுமொரு மாதவம் வேறுமுண்டோ? | 109 |
1554 | | மீளாத் துயர்க்கடலில் - உயிரெலாம் வீழ்ந்து முழுகையிலே, பாழாங் குகைதேடிச் செயுந்தவம் பாவமே ஆகுமம்மா!” | 110 |
| | வேறு | |
1555 | | என்றுகனிந் துளமுருகி எழுந்த காலை, எமன்விட்ட தூதுவர்போல் ஆட்டை யெல்லாம் குன்றிருந்து துரத்திவரு மவரைக் கண்டு, குவலயத்தில் அருள்மாரி மொழியும் ஐயன்; | 111 |
| | வேறு | |
1556 | | “மாலைப் பொழுதின்னும் ஆகவில்லை - வெயில் மண்டை பிறந்து வெடிக்குதையோ! சாலை வழிஇந்த ஆடுகளும் - எங்கு சாய்ந்து செலுமையா கூறும்” என்றான. | 112 |