1557 | | அம்மொழி கேட்டவ் விடயருமே - “எம்ம ஆளும் இறவன தாணயினால், செம்மறி நூறு, வெள் ளாடும் ஒருநூறு சேர்த் வருகிறோம்” என்றுரத்தார். | 113 |
1558 | | இன்றிரா யாகம் முடியுதென்றார் - அதில் இத்தனை யுங்கொலை யாகும்என்றார்; நின்றுசொல நேரம் இல்லைஎன்றார் - இன்னும் நீண்ட வழிபோக வேண்டும்என்றார். | 114 |
| | வேறு | |
1559 | | வள்ளலும் உள்ளம் வருந்தி, யானும் - அந்த மாமகம் காண வருவேனென்று, துள்ளும் மறியுஞ் சுமந்துகொண்டு - தாயும் சேர்ந்து தொடர வழிநடந்தார். | 115 |
1560 | | மானேந்தும் ஈசனுளம் நாண, ஆட்டின் மறியேந்து பெருங்கருணைப் புனித வள்ளல், வானேந்து மதில்மீது கொடிகள் ஆடும் மாநகரின் திருவாயில் வந்தபோது; | 116 |
| | வேறு | |
1561 | | செங்கதிர் வெம்மை தணிந்ததடி! - வாசத் தென்றல் உலாவி எழுந்ததடி! பொங்கி வருஞ்சோணை மாநதியும் - ஒரு பொன்னிறம் பெற்றுப் பொலிந்ததடி! | 117 |
1562 | | முல்லை மலர்ந்து மகிழ்ந்ததடி! - ஆம்பல் மூடிய வாயும் திறந்ததடி! எல்லை யிலாமலர்ச் சோலையிலே - வண்டும் இன்னிசை பாடித் திரிந்ததடி! | 118 |
1563 | | தாயும் இரங்கி வருகுதடி - கன்றும் தாவிக் குதித்தோடிச் செல்லுதடி! ஆயும் பொழிலில் பறவையெல்லாம் - அந்தி அங்காடி போல ஒலிக்குதடி! | 119 |