Untitled Document
| | 31. கடல் | 185 | | எல்லை அறியாய் பெருங்கடலே - நீதான் இரவும் உறங்காயோ? கடலே அல்லும் பகலும் அலைகடலே - உனக்கு அலுப்பும் இலையோ கருங்கடலே |
186 | | உருண்டு திரண்டு வருங்கடலையே - உடைந்து ஓடிப் போவதேன் - கடலே வெருண்டு மதிகெட்டாய் கடலே - பாறை விலகிப் போகுமோ கடலே |
187 | | பொங்கு திரைகளோ? கடலே - அவை புரவி நிரைதாமோ? கடலே! எங்கும் உனதொலியோ? கடலே! - அன்றி இடியின் முழக்கமோ? கடலே! |
188 | | ஓடம் எடுத்தெறியும் கடலே! - தயை உனக்குச் சற்றிலையோ? கடலே! ஆடல் வீடிதனைக் கடலே! - நீயும் அழிப்ப தழகாமோ? கடலே! |
189 | | மலையை வயிற்றடக்கம் கடலே! - எண்ணில் மகர மீனுலவும் கடலே! விலைகொள் முத்தளிக்கும் கடலே! - சிப்பி விளையாட டற்குதவும் கடலே! |
190 | | மழைக்கு மூலமும்நீ, கடலே! - அதை வாங்கி வைப்பதும் நீ, கடலே! வழுத்து மகிமையெலாம் கடலே! - எவர் மதித்து முடிக்கவலார் கடலே! |
| | 32. சந்திரன் | 191 | | மீனினம் ஓடிப் பரக்குதம்மா! - ஊடே வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா! வானும் கடலாக மாறுதம்மா! - இந்த மாட்சியி லுள்ளம் முழுகுதம்மா! | |
|
|