முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 35 |
Untitled Document
192 | | முல்லை மலர்ப்பந்தல் இட்டனரோ? - தேவர் முத்து விதானம் அமைத்தனரோ? வெல்லு மதியின் திருமணமோ? - அவன் விண்ணில் விழாவரும் வேளையிதோ? |
193 | | அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா! - அயல் ஆம்பலும் கண்டு களிக்குதம்மா! இம்ப ருலகின் இயல்பிதம்மா! - மதிக்கு இன்னார் இனியாரும் உண்டோ? அம்மா! |
194 | | மாற்றம் உலகின் இயற்கையென - இங்கு மாந்தரும் கண்டு தெளிந்திடவோ, போற்றும் இறைவன்இம் மாமதியும் - விண்ணில் பூத்து நிலவ விதித்தனனே! |
195 | | அம்புலிக் கூட்டில் முயல்வருமோ? - ஈதோர் அண்டப் புளுகோ? அறியேன் அம்மா! பம்பி யெழுமலை அங்குளதும் - மேலைப் பண்டிதர் கண்டகனவே அம்மா! |
196 | | கூனக் கிழவி நிலவினிலே - ராட்டில் கொட்டை நூற்கும்பணி செய்வதைஇம் மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி மாமதி யோங்கி வளருதம்மா! |
197 | | சின்னஞ் சிறு வில்லாய்க் கண்டதம்மா! - பின்னர் செம்பொற் குடம்போலே தோன்றுதம்மா! என்ன அதிசயம் பாராயம்மா! - ஈதோர் இந்திர சாலமோ! கூறயம்மா! |
198 | | வளர்ந்து வளர்ந்து பெருகுதம்மா! - உடல் வட்டந் திருந்தி வருகுதம்மா! தளர்ந்து தளர்ந்துபின் போகுதம்மா! - கண்ணில் சற்றுந் தெரியாமல் ஆகுதம்மா! |
199 | | பாலாழி மீது படர்ந்தவெண்ணெய் - ஒரு பந்தா யுருண்டு திரண்டதுவோ? மேலா யுலகில் ஒளிசெயவே - ஈசன் விண்ணக மிட்ட விளக்கிதுவோ! | |
|
|