பக்கம் எண் :

350கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  தீய நெறியில் திரிந்து பொல்லாப்
பாதக ராகிப் பழிசெய் வோரும்,
உலகில் உண்டெனும் உண்மைமறவேன்.
என்வாழ்வு என்றும் இனிய வாழ்வாம்.
நன் மையை நிதமும் நாடி நிற்பேன்.
இயன்றதை எண்ணி இனிது முடிப்பேன்.
வேண்டிய யாவும் விதிமுறை செய்வேன்
வரும்விதி வரினும் வருவது முற்றும்
நன்மை வருமென நம்பி வாழ்வேன்.
என்று கூறினள், யாவையும் கேட்டபின்
உலகெலாம் புகழும் ஒருதனி முனிவன்,
“அறிவிற் பெரிய ஆசிரி யர்க்கும்
அறிவு புகட்டும்நல் அறிவுடை யவள்நீ!
உண்மை ஞானியும் உணரா உண்மைஉன்
இனிய கதையில் எளிது விளங்கிடும்;
நீதி நெறியும் நினக்குறு கடமையும்
உள்ள வாறுநீ உணர்ந்திருக்க கின்றனை!
அம்மா! நீயும் அறிந்த தமையும்
இனிநீ அறிவதற்கு யாது மேயிலை,
வளர்க, வாச வல்லியே வளர்க!
இனத்துடன் ஓங்கி இனிது வளர்க!
தண்ணிழ லின்கீழ் தழைத்து வளர்க!
உண்மையின் வெங்கதிர் ஒளிஇவ் வுலகில்
இளந்தளிர் வளர்ந்திடற்கு இசைந்த தன்றாம்
இளந்தளிர் என்றும் இளவெயி லதனில்
வாய்த்து வளர்ந்து வானுற ஓங்கிப்
பூத்துக் காய்த்துப் பொலிவுற் றிடுமால்!
என்னை வணங்கிய ஏந்திழாய்! யானும்இங்கு
உன்னை வணங்கி உளங்களிப் புற்றேன்
செல்விஉன் னுள்ளந் தெளிந்த உள்ளமாம்.
அன்பே துணையாய் அடையுங் கூட்டினைச்
சென்று சேரும் சிறுபுறா என்ன
அறியா தனைத்தும் அறிந்து கொண்டனை,
நிலையா வுலகை நிலையென நம்பி