முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 349 |
Untitled Document
| | ஆலயம் தொழுவேன், அன்பு நிறைந்த நண்பர் பலரொடு நல்லுரை யாடுவேன்; ஈசன் அருளால் இத்தனை பேறும் பெற்ற எனக்கினிப் பெரும்பேறு ஒன்று பெறுதற் குளதோ? பிள்ளை இவனால் தந்தையின் ஆன்மா தனிவிசும் பதனை அடைவதில் ஏதும் ஐயம்உண்டோ? வேனில் வெளியில் வெந்தெரி வேளையில் நீள்வழிச் செல்வோர் நிழலிற் செல்ல சாலை மரங்கள் தழைத்திட வைப்போர், ஆறு குளங்கள் ஆங்காங்கு அமைப்போர், அன்ன சத்திரம் ஆலயம் எடுப்போர், பொன்போல் இனிய புதல்வரைப் பெறுவோர், யாவரும, மரணம் எய்திய பின்னர், மேவுதற்கரிய மேற்கதி அடைவர், எனவே மறைகள் இயம்பிடு கின்றன. நன்மை தீமை நாடி யுணர்ந்தோர் உண்மை ஞான முடையஉரவோர் வேத சாத்திரம் விதிமுறை தெரிந்தோர் கண்ணாற் கடவுளைக் கண்ட பெரியோர் முன்னை முனிவர் மொழிந்த மொழியெலாம் (அவரினும் சிறந்த அறிவிலேன் ஆதலின்) மெய்ம்மொழி யாக மேற்கொண்டு ஒழுகுவேன். எவர்க்கு மெவர்க்கும் இவ்வுலக இதனில் என்று மென்றும் எங்கணு மெங்கணும் நன்மை விதைத்தால் நன்மையே விளையும்; தீமை விதைத்தால் தீமையே விளையும்; கரும்பில் வேம்பு காய்ப்பது முண்டோ? வேம்பில் கரும்பு விளைவது முண்டோ? வெறுப்பா லாவது வீண்பகை யேயாம். அன்பா லனைவரும் நண்பரே யாவர். பொறுமையால் இந்தப் புவிமீது என்றும் அழியா அமைதி அடைவதும் எளிதாம். இறந்த பின்னரும் இதுபோல் இன்னொரு | |
|
|
|