Untitled Document | | ஒப்பிலாச் சுத்த உணவாம் இதனை உண்டு தெளிந்த உடலைக் கண்டபின் உண்மையை அறிவதும் உறுதி யாம்எனச் சிந்தையில் நன்கு தெரிந்து கொண்டனன். மாதே! நீவெறும் வாழ்க்கையி னால்இவ் உலகில் இன்பம்உண்மையாக அடைகின் றனையோ? அறியச் சொல்வாய்! பெற்ற வாழ்க்கையும் பேணி அன்பும் புவியில் உனக்குப் போதுமோ அம்மா! என்று வனவினன் ஏந்திழை அதுகேட்டு, அகிலம் புகழும் அண்ணலே! தொழுதேன். சிறிதாம் என்னுளம், சின்னஞ் சிறிய ஆம்பல் இதழினும் அறவே சிறிதாம்; தரணி மீது தழைத்தஅது வளரச் சிந்திப் பெய்யும் சிறுமழை போதும். கணவன் உள்ளக் கருணையும், என்றன் மதலையின் முகத்தில் மலர்புன் சிரிப்பும் உயிரை ஊட்டும் உதய பானுவாய் உதவிடும், ஐயா! உண்மை இதுவாம். காலையி லெழுந்து கடவுளைத் தொழுவேன்; தானியம் அளந்து தானஞ் செய்வேன்; வெள்ளாட் டிகட்கு வேலைகள் விதிப்பேன்; அப்பால், நண்பகல் வேளைஎன் நாயகன் அயர்ந்து மடியில் தலையை வைத்து நித்திரை செய்ய, யானும் சிந்தை மகிழ்ந்தே இதமாய் இனிய இசைகள் பாடி விசிறி எடுத்து வீசி யிருப்பேன்; அப்பால், மலையிற் கதிரோன் மறைந்திடு வேளை, கணவன் உண்டு களித்திடச் சுவைதரு பண்டம் பலவும் பரிமாறி நிற்பேன்; அப்பால், விண்மீன் வானில் விளக்கிடு நேரம் | | |
|
|