பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு347

Untitled Document
  பக்குவம் செய்த பாலமுது இதுவாம்.
பிள்ளை பிறந்தால் பெருந்திரு அமுது
வனத்தின் கடவுள் வாழ்மரத் தடியில்
வைத்து நின்று வணங்குவேன் என்றொரு
நேர்த்திக் கடன்முன் நேர்ந்தி ருந்தனன்.
இன்று,
மைந்தனைப் பெற்ற மகிழ்ச்சியால், அந்த
நேர்த்திக் கடனை நிரப்பிட வந்தேன்;
இனியென் வாழவெலாம் இனியநல் வாழ்வாம்;
யாதும் ஐயம் இலை’ எனக் கூறினள்.
அப்பால்,
மதலையைப் பொதிந்த மஞ்சள் நிறத்தனை
ஆடையை மெல்ல அகற்றி, நம் அண்ணல்
உவந்திவ் வுலகெலாம் உய்ய உழைக்கும்
திருக்கரங் களை அதன் சிரசின் மீது
வைத்து நின்று, ‘மங்கையே, உனக்கு
மனத்தில் இன்பம் வளர்ந்து வருக!
மைந்த னிவனும் மாநிலமீது
வருந்தாது இனிய வாழ்வு வாழ்க!
காணுதற் கரிய கடவுள் யானலன்;
மண்ணிற் பிறந்தஓர் மனிதனே அம்மா!
ஆதியில் உலகாள் அரசிளங் குமரன்;
இந்நாள்,
வையக மாந்தர் மனஇருள் போக்கும்
உண்மை ஞான ஒளியினைத் தேடி
ஆறாண் டாகஅல்லும் பகலும்
அலைந்து திரியும் ஆண்டியும் ஆவேன்
உண்மை ஞான ஒளியினை யானும்
அடைவன்; அதற்கோர் ஐய மேயிலை.
பிறப்பும் பற்பல பிறந்து பிறந்து
பாவம் போக்கிப் படிப்படி யாக
மேலாம் பிறப்பை மேவிடும் உயிர்போல்,
உயிர்மே லுயிருக்கு ஊட்டி யூட்டி
வடித்து வடித்து மாசு நீக்கிய