பக்கம் எண் :

356கவிமணியின் கவிதைகள்

Untitled Document
என்னும் மொழிகளினி
     எக்காலம் கேட்பனையா?
204
1648 நெஞ்சிற் கவலையெல்லாம்
     நிற்காமல் ஓட்டும்அந்தப்
புஞ்சிரிப்பைக் காணாது
     புத்திதடு மாறுதையா!
205
1649 இட்டளைந்து கூழைஎனக்கு
     இன்னமுதம் ஆக்கியகை
கட்டழிதல் கண்டுமனம்
     கறங்காய்ச் சுழலுதையா!
206
1650 சோலைப் பசுங்கிளிகள்
     தேழனையும் காணாமல்
நாலு திசைகளிலும்
     நாடித் திரியாவோ?
207
1651 அன்னப் பறவைகளென்
     அழகனைப் பார்க்கவந்தால்
என்னமொழி கூறஇனி
     என்நா எழுமையா?
208
1652 துள்ளிவிளை யாடஎன்றன்
     சுந்தரனைத் தேடிவரும்
புள்ளிமான் கன்றினுக்குஎப்
     பொய்சொல்லி நிற்பனையா?
209

1653 சித்தரத் தேரும்
     சிறபறையும் கூடிஎனைப்
பித்திலும் பித்தி
     பெரும்பித்தி ஆக்குதையா!
210

1654 குஞ்சை யிழந்தகுயில்
     கூவியழக் கண்டகனா
நெஞ்சை யறுக்குதையா
     நினைப்பொழிய மாட்டாதையா!
211

1655 கொம்படர்ந்த மாவின்
     குலையடர்ந்த பூம்பிஞ்சு
வெம்பிவிழக் கண்டகனா
     மெய்யாய் விடுமோஐயா?
212