முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 357 |
Untitled Document 1656 | | கழுத்திற் கயிறிறுக்கிக் கன்றுவிழக் கண்டகனா, பழுத்துப் பலித்திடுமோ? பலன்மாறி நின்றிடுமோ? | 213 | 1657 | | தாயாகி உள்ளம் தருக்கி யிருந்ததுபோய்ப் பேயாக இன்று பிணந்தூக்கி நிற்பேனோ? | 214 | 1658 | | இந்தப் பிறவியில்யான் எப்பிழையும் செய்தறியேன்; எவ்விதம் என்வயிற்றில் இவ்விடியும் வீழ்ந்ததையா?” | 215 | | | வேறு | | 1659 | | கன்றொ ழிந்தகா ராவின் கலக்கமொத்து அன்றி அரற்றி அழுத அரிவையை என்றும் எங்ஙணும் எவ்வுயி ரும்தொழ நன்றுகண்ட மெய்ஞ் ஞானியும் நோக்கியே, | 216 |
| | வேறு | | 1660 | | “தாயேநின் மனக்கவலை - ஒழிந்திடத் தக்கநல் மருந்தளிப்பேன்; சேயினை எழுப்பிடுவேன் - விளையாடித் திரியவும் செய்திடுவேன். | 217 |
1661 | | நாவிய கடுகுவேண்டும் - அதுவுமோர் நாவுரி தானும் வேண்டும்; சாவினை அறியாத - வீட்டினில் தந்ததா யிருக்க வேண்டும்! | 218 |
1662 | | பக்கமாம் பதிகளிலே - சென்றுநீ பார்த்திது வாங்கிவந்தால்; துக்கமும் அகலுமம்மா! - குழந்தையும் சுகமாக வாழுமம்மா!” | 219 | |
|
|