Untitled Document 1674 | | மலர்ந்து நல்ல மணம்வீசி வையம் புகழ வாழாமல், உலர்ந்து வீழும் அரும்புகளில் உலகில் யாரே எண்ணிடுவார்? கலந்த திருவும் யௌவனமும் கண்ணுக் கினிய மெய்யழகும் குலைந்து போகும் என்றறிஞர் கூறும் கூற்றில் ஐயமுண்டோ? | 5 |
1675 | | பலநூல் கற்ற பண்டிதர்கள் பலரும் சபைகள் பலகூடிச் கலகம் வாதம் செய்திடுக; கண்டங் கிழிய முழங்கிடுக மலரும் மலர்கள் வாடலும் இவ் வாழ்வு நிலையா தோடலுமே உலகம் கண்ட உண்மைகளாம்; உண்டோ மற்றொன்று உரைத்திடவே? | 6 |
1676 | | சிரித்த ரோஜா மலரைப்பார், செப்பும் இனிய மொழியைக்கேள்; ‘அருத்தி யோடிவ் வுலகில்வந்து அழகார் நந்த வனமதிலே, பரித்த பட்டுப் பைகீறிப் பைம்பொன் நிதியைப் படிமீது விரித்து வீசி எங்கெங்கும் விதைத்துச் செல்வன்’ என்றிடுமே. | 7 |
1677 | | நினைப்பு நீண்டு தழைத்துவரும்; நீறி வெந்து சாம்பருமாம்; அனைத்தும் பாலை வனத்தினிலே அமையும் பனிபோல் அரைநொடியில், மனத்தில் தோன்றி நிலையாது மாண்டு மறைதல் உண்மையதாம்; எனைத்து நூலின் வலியாலும் இதனை மறுக்க இயலாதே. | 8 | |
|
|