பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு367

Untitled Document
1694 மண்ணை வலமாய்ச் சுற்றிவந்தேன்,
     வானும் அளந்து கணக்கிட்டேன்;
நண்ணும் வழியில் பலசிக்கல்
     நாடி நன்கு விளக்கிவந்தேன்;
எண்ணும் மனிதர் தமையடையும்
     இறப்பும் ஊழும் இவையென்று,
திண்ண மாகச் சொல்லஎதும்
     தெரியா திங்கே திகைத்தேனே.
25

1695 திட்டிக் கதவு தெரிந்ததடா!
     திறவு கோலும் இல்லையடா!
கட்டித் திரையும் கண்டதடா!
     கண்ணும் மயங்கி நின்றதடா!
ஒட்டிச் சிறிது நீநானென்று
     உரைத்த உரையும் கேட்டதடா!
நட்ட காலம் பின்னையடா!
     நான்நீ அற்றப் போச்சுதடா
26

1696 பாரின் மீது கவிழ்த்தஒரு
     பானை யாமிவ் வானகமே;
சாரு மிதன்கீழ் எவ்வுயிரும்
     தங்கி வாழ்ந்து மறைந்திடுமால்;
யாரும் இதனை நோக்கிவரம்
     இரந்து வேண்டி நிற்பாரோ?
தேரின் இதுவும் நம்மைப்போல்
     திகைத்தெந் நாளும் சுழன்றிடுமே.
27

1697 இருளில் ஏகும் மக்களெலாம்
     இடறி வழியில் வீழாமல்,
அருளி அழைத்துச் செல்லவிதிக்கு
     அளித்த தீபம் யாதென்றேன்;
உருளும் வானம் எனைநோக்கி,
     ‘உணர்ந்தும் உணரா உணர்வென்னும்
மருளி ஞானம் உளது’ என்ன
     மாற்றம் தந்து சென்றதம்மா!
28