பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு369

Untitled Document
1702 மண்ணில் உடைந்த மண்ணாக
     மாறி மண்ணில் மறைந்திடுமே;
மண்ணிலிருந்து மண்ணெடுத்து
     வனைந்து வைத்தான் இவ்வுடலை;
எண்ணி இதனை அறியாதார்
     ஏதும் அறியார்; இவ்வுலகில்
நண்ணும் வினைகண்டு, அஞ்சிநிதம்
     நடுங்கி நடுங்கி நலிபவரே.
33

1703 மண்ணிற் செய்த கலமுடையின்
     மண்ணில் மண்ணாய் போகுமென,
எண்ணி முன்னாள் அக்குயவன்
     எனையும் மண்ணில் வனைந்தனனால்;
உண்மை இதனை உள்ளத்தில்
     ஊன்றி உணரா மாந்தரெலாம்
வெண்மை பேசித் திரிபவரே,
     வீணாய் வாதம் செய்பவரே.
34

1704 படைத்த மண்ணும் நல்மண்ணோ?
     பழுது நிறைந்த பொய்மண்ணோ?
படைத்த மண்நல் மண்ணானால்,
     பானை உடைந்து போவதுமேன்?
படைத்த மண்ணில் பழுதுளதேல்
     பழிதான் எவரைச் சார்ந்ததுவாம்?
படைத்த படைப்பின் உண்மையெலாம்
     பாரில் யாரே பகர்ந்திடுவார்!
35

1705 வந்த வந்த மனிதரெலாம்
     வளைவும் நெளிவும் கண்டென்னைச்
சந்த மில்லாப் பானையெனத்
     தள்ளி வைத்துச் சென்றனரால்;
அந்த நாள் அக் குயவன்கை
     ஆட்டத் தாலே நேர்ந்தபிழைக்கு
இந்த நாளில் ஏழைஎனை
     ஏனோ குறைகள் கூறவரே?
36