Untitled Document 1706 | | மன்னும் ரம்ஸான் முடிவினிலே, மாலைப் பெழுதில், வான்மீது சின்ன மதிவந் தெழுமுன்னம், சேரிக் குயவன் கடைதன்னில், வன்னப் பானை சட்டியெல்லாம் வைத்த அறையின் நடுவேயான் தன்னந் தனியே போய்நின்ற சரிதமிதனைக் கேளாயோ! | 37 |
1707 | | கண்ணிற் கண்ட அற்புதமாம்; காதிற் கேட்ட மொழியேயாம்; மண்ணிற் செய்த கலமொன்று மாயமாக வாய்திறந்து ‘வண்ணக் கலமிங் கெவரேயாம்? வனைந்த குயவன் யாரேயாம்? எண்ணி யறிந்து விடைதருவார் யாவருள்ளார்?’ என்றது, அம்மா! | 38 |
1708 | | உண்ட வெறியில் முன்னொருநாள் உண்ட கலத்தை உடைத்தெறிந்தேன் துண்டாய் துண்டாய்ப் போனகலம் துணிந்து மெல்ல எனைநோக்கிப் ‘பண்டு யானம் உன்வாழ்வைப் பாரில் அடைந்தேன்; நீயுமெனக்கு அண்டு இந்த வாழ்வைஇனி அடைவாய், உண்மை என்றதடா! | 39 |
1709 | | நலஞ்செய் பன்னீர் நாடியொரு நந்த வனத்தை நானடைந்தேன்; உலர்ந்து வெந்து கரித்தங்கோர் உரோஜா நின்ற நிலைகண்டு ‘கலந்த நோயும் யாது?’ என்றென்; காதில் மெல்ல, ‘யாம் முன்னம் மலர்ந்த முகமாய் விளையாடி வாழ்ந்த இடம்ஈது’ என்றதம்மா! | 40 | |
|
|