பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு389

Untitled Document
1782 இல்லாப் பொருளுக் கேங்காமல்
     இருக்கும் பொருளும் எண்ணாமல்
எல்லாம் வல்ல எம்பெருமான்
     இரங்கி அளக்கும் படிவாங்கி,
நல்லார் அறிஞர் நட்பையும்நீ
     நாளும் நாளும் நாடுவையேல்,
நில்லா உலகில் நிலைத்தசுகம்
     நீண்டு வளரும் நிச்சயமே.
113

பிற் சேர்க்கை

1783 எழுதிச் செல்லும் விதியின்கை
     எழுதி எழுதி மேற்செல்லும்;
தொழுது போற்றி நின்றாலும்
     சூழ்ச்சி பலவும் செய்தாலும்,
அழுது கண்ணீர் விட்டாலும்,
     அபயம் அபயம் என்றாலும்
வழுவிப் பின்னால் ஏகியொரு
     வார்த்தை மாற்றம் செய்திடுமோ?
 

1784 பாரி போலக் கொடுத்தவரும்,
     பணத்தைப் புதைத்து வைத்தவரும்,
தேரின் மண்ணாய்ப் போனதலால்,
     செம்பொன் னானது அழியோமோ;
ஊரில் அவர்தம் உடலையெடுத்து
     உரையும் நிறையும் காணாரே;
ஒரும் உள்ளத் துண்மையிதை
     ஊன்றி நோக்கி உணர்வாயே.