பக்கம் எண் :

390கவிமணியின் கவிதைகள்

Untitled Document
தே.வி.யின் கீர்த்தனங்கள்
1. குலதெய்வம்

இராகம் - பிலகரி     தாளம் - ஆதி
பல்லவி
1785 பாதார விந்தம் பணிந்தேன் - கடைக்கண்நீ
பாலிக்க வேண்டு மம்மா!
(பாதார)
அநுபல்லவி
மாதா பிதாவும் நீயே!
     மந்த்ர குரு நீயே!
ஆதாரம் எனக்கு வே
     றாரும் ஒருவருண்டோ?
சரணம்
வெம்பு பிணியில் விழுந்து - வருந்திநிதம்
     விழிநீர் பொழிகின்றேன்,
கும்பிடும் தெய்வமே!
     குலதெய்வமே! உன்னை
நம்பிடும் ஏழையைக்கை
     நழுவ விடலாமோ?
2. என்று வருவாரோடி?

இராகம் - காமவர்த்தினி     தாளம் - ஆதி
1786 என்று வருவா ரோடி? - என்மீ
     திரக்கமும் கொள்ளா ரோடி?
அநுபல்லவி
இன்று வருவாரோ?
     நாளை வருவாரோ?
இன்னும் ஒருவாரம்
     நின்று வருவாரோ? (என்று)