பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு393

Untitled Document
அநுபல்லவி
பொன்னுலகத்தை மீட்டிப்
     புரந்தர னாளவைத்த
பன்னிரு கரந்திகழ்
     படைக்கல வீரா!
(உன்னிடத்)
சரணம்
அருணகிரிக்குச் செய்த
     கருணைசெய் தடியேனை,
ஆட்கொள லாகாதா?
     தருணமிதுவே ஐயா!
தளர்ந்து நின்றேனையா!
     வருணம் சிறந்ததோகை
மயிலேறி விளையாடும்
     மாமுருகா! வள்ளி
மகிழ் மணவாளா!
(உன்னிடத்)
6. வேறு அறியேன்
இராகம் - சுத்ததன்யாஸி     தாளம் - ஆதி
பல்லவி
1790 திருவடி தொழுதுநின்றேன் - ஜன்மமீடேறிச்
     செயலெதும் வேறறியேன்
 
அநுபல்லவி
குருவடி வாகவந்து
     குருந்த மரத்தடியில்
அரிய நல்லுபதேசம்
     அடியர்க் களித்த ஈசா (திருவடி)
சரணம்
வேத புராண மெலாம் - ஓதிட
     விதியும் மதியும் இல்லேன்,
மாதவம் செய்திடவும் - உடலிதில்
     வலிமை சிறிது மில்லேன்;