பக்கம் எண் :

392கவிமணியின் கவிதைகள்

Untitled Document
கொடுமை தணிந் தரசு
     குடியர சாகிடவே
அடிமைத் தளை யறுத்த
     ஆகஸ்டு பதினைந்தே
(பாரதத்)
4. பரமேசுவரி
இராகம் - ஸிம்மேந்திர மத்யமம     தாளம் - மிஸ்ரசாபு
பல்லவி
1788 உன்னையே நம்பினே னம்மா! - பரமேஸ்வரி
     உன்னையே நம்பினே னம்மா!
 
அநுபல்லவி
அன்னையே நின்னையல்லால்
     ஆழிசூ ழிவ்வுலகில்
என்னையா தரித்தாள
     எவரும் ஒருவருண்டோ?         (உன்னையே)
சரணம்
  நில்லா உலக வாழ்வை - ஏழைநான்
     நிலையென்று கொண்டு நித்தம்
பொல்லா வழிகளிலே
     புத்திகெட் டலைந்திட்டேன்,
எல்லாம் நீ பொறுத்துள்ளம்
     இரங்கி அருள்புரிவாய்!
(உன்னையே)
5. மாமுருகா!
இராகம் - சுரடி     தாளம் - ஆதி
பல்லவி
1789 உன்னிடத் தன்றிவே றேவரிடத் தென்குறைகள்
     உரைத்திடச் செல்வே னையா!