பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு397

Untitled Document
பாவம் பறந்தோடிப் போகும் - பெரும்
     பாக்கியம் வந்து நம்மைச் சேரும்;
தேவர் முனிவருமே காணா - அந்தச்
     சிவலோக வாழ்வும் நமக்கெய்தும்
(நல்லது)
12. உன்னாலே என்ன ஆகும்?
இராகம் - அஸாவேரி     தாளம் - மிச்ரசாபு
பல்லவி
1796 உன்னாலே என்ன ஆகும்? - ஏழை மனிதா!
     உன்னாலே என்ன ஆகும்?
 
அநுபல்லவி
  நன்னாரிற் பூட்டியொரு
     நாயகன் ஆட்டி யல்லால்,
தன்னாலே ஆடும் பாவை
     தரணியில் எங்கு முண்டோ?             (உன்னா)
 
சரணம்  
   எல்லாம் இயற்றுதற்கு
     வல்லான்எம் மறைக்குமே
சொல்லால் அளவறுத்துச்
     சொல்லற் கரியபிரான்,
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
     நடுநின்று நடஞ்செயும்
அல்லாரும் கண்டனவன்
     அருளைப் பெறாதிருந்தால்            (உன்னா)
 
13. கடைக்கண் பாராயோ?
இராகம் - கமாஸ     தாளம் - ரூபகம்
பல்லவி
1797 கடைக்கண் பாராயோ? - உள்ளம்
     கனிந் தருளாயோ?