பக்கம் எண் :

398கவிமணியின் கவிதைகள்

Untitled Document
அநுபல்லவி
அடைக்கலம் புகுந்தேன் - துணைவே
     றாருமில்லை ஐயா!
(கடைக்)
சரணம்
பத்தரோ டுன்னை - நிதமும்
     பணிந்து போற்றாமல்,
புத்தகக் காட்டில் - அலைந்து
     பொழுதைப் போக்கிவிட்டேன்
(கடைக்)
  வாசத் துளவத்தின் - மகிமை
     மனதிலோ ராமல்,
காசு பணத்தையே - எண்ணிக்
     காலம் போக்கிவிட்டேன்
(கடைக்)
  முற்றுமன்பாலே - திருவாள்
    மொழியை ஓதமால்,
வெற்று ரையாடி - நாளை
    வீணாய்ப் போக்கிவிட்டேன்
(கடைக்)
எட்டெழுத்தை நெஞ்சில் - அன்போ
     டெழுதி வையாமல்,
பட்ட மன்னவரின் - கதைகள்
     பாடம்பண்ணி நின்றேன்
(கடைக்)
மன்னர் சபையிலே - நின்று
     மறுகி ஓலமிட்ட
அன்னை பாஞ்சாலிக்கு - அபயம்
     அளித்த மாமுகிலே!
(கடைக்)
ஆதி மூலமே! - எனுமுன்
     ஆனைமுன் வந்த
நாத நாரணா! - பதும
     நாப! கோவிந்தா!
வேத நாயகா! - முகுந்தா!
     வேணு கோபாலா!
மாதவா! க்ருஷ்ணா! - திருவாழ்
     மார்பா! கேசவா!
(கடைக்)