பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு403

Untitled Document
நன்செய் புன்செய் செழித்திடவே
     நாக ரீகம் சிறந்திடவே
விஞ்சும் தொழில்கள் பற்பலவும்
     மேன்மை லோங்கி வளர்ந்திடவே
(சூரிய)
அடிமைக் குணம்வே ரற்றிடவே
     ஆண்மை ஆக்கம் பெருகிடவே
மடிமை என்றும் மடிந்திடவே
     மனதில் ஊக்கம் பிறந்திடவே
(சூரிய)
வஞ்சம் ஓடி மறைந்திடவே
     வாய்மை எங்கும் மலிந்திடவே
பஞ்சம் பிணிகள் அகன்றிடவே
     பாக்ய லக்ஷ்மி நடமிடவே
(சூரிய)
திலகர் முதலோர் முன்னாளில்
     செய்த தியாகம் பலனுறவே
உலகம் புகழும் காந்திமகான்
     உள்ளத் துவகை பொங்கிடவே
(சூரிய)
20. மனத்துக்கு
இராகம் - பரசு     தாளம் - ஆதி
பல்லவி
1804 வந்தனை செய் மனமே! - மலரடி
     வாழ்த்தி வணங்கு மனமே!
அநுபல்லவி
கந்தனைச் சண்முகனைக்
     கடம்பணி வோனை உமை
மைந்தனைத் திருமகள்
     மருகனை முருகனை
(வந்தனை)
சரணம்
சாத்திரம் படித்தோயாச்
     சண்டை வளர்த்திடாமல்,
நாத்திகம் பேசிப்பொல்லா
     நரகினுக் காளாகாமல்,