முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 405 |
Untitled Document
| | ஆதிரை அண்ணல் வாழ்க! அம்பலக் கூத்தன் வாழ்க! வேத முதல்வன் வாழ்க! விண்ணோர் பெருமான் வாழ்க! சோதி சொரூபன் வாழ்க! சுந்தரர் தூதன் வாழ்க! சீத மதிபு னையும் சிவன் வாழ்க! வாழ்க! என்று | (திரு) |
| | அஞ்செழுத் தையன் வாழ்க! அடியார்க் கெளியன் வாழ்க! நஞ்சுண்ட கண்டன் வாழ்க! நாதவி நோதன் வாழ்க! குஞ்சித பாதன் வாழ்க! கோதில்முக் கண்ணன் வாழ்க! தஞ்சமென் றவர்க் கருள் சங்கரன் வாழ்க! என்று! | (திரு) |
| | மங்கையோர் பாகன் வாழ்க! மான்மழு வேந்தி வாழ்க! கங்கை யணிந்தோன் வாழ்க! காலனைக் காய்ந்தோன் வாழ்க! சங்கக் குழையோன் வாழ்க! தந்தைதாய் இல்லான் வாழ்க! அங்கையில் அன லேந்தும் அரன் வாழ்க! வாழ்க! என்று | (திரு) |
இராகம் - ஷண்முகப்பிரியா | | | தாளம் - ஆதி |
1807 | | இன்னிசைத் தமிழ் அமுதம் - இரங்கிநீ எனக்கருள் செய்வா யம்மா! | | |
|
|