பக்கம் எண் :

406கவிமணியின் கவிதைகள்

Untitled Document
அநுபல்லவி
கன்னலும் தேனும்முக்
     கனியும் கனிந்தொழுகு
சொல்நயம் பொருள்நயம்
     தொடைநயம் பெருகவே
(இன்னிசைத்)
சரணம்
நாத்தழும் பேறக்கவி
     நவநவ மாகப்பாடி
தோத்திரம் செய்துன்பாதம்
     தொழுதிட வேண்டும் அம்மா!
வாய்த்தவென் தாமரையும்
     வணங்கும் அடியருளம்
பூத்தபொற் றாமரையும்
     பொலிய விளங்கும் தாயே!
(இன்னிசைத்)
24. ஆறுமுக நாவலர்
இராகம் - மோகனம     தாளம் - ஆதி
பல்லவி
1808 எல்லாரும் பாடிப் புகழ்வோம் - இன்று நாம்
     எல்லாரும் பாடிப் புகழ்வோம்
அநுபல்லவி
அல்லாரும் கண்டன்
     திரு அடியிணை மறவாத
நல்லானை ஆறுமுக
     நாவலர் பெருமானை
(எல்லாரும்)
சரணம்
ஐயம் திரிபகலவே - நூல்களை
     ஆராய்ந் தளித்தெமக்கு
செய்ய நெறிவகுத்த
     செந்தமிழ்ச் செல்வனை
சைவப் பயிர் வளர்த்த
     சற்குரு நாதனை
(எல்லாரும்)