Untitled Document
| | அண்டும் அடிமை தனை அற்று நொறுங்கிய விழ சண்டை ஒழிந்துலகில் சமரசம் ஓங்கிவரப் பண்டை முடியரசு பணிந்த படமெடுக்க எண்டிசையும் புகழ எழுந்த குடியரசு சாதி சமய வெறி தளரக் கலை வளர நீதி வளர அறம் நிலைக்க நீதி வளர ஆதி பகவனடிக் கன்பு வளரச் செய்த மாதவப் பயனென வாய்த்த குடியரசு. | |
இராகம் - முகாரி | | | தாளம் - ஆதி |
1811 | | இன்னிசைக் கவிபாட ஒருவரம் எனக்கருள் செய்வா யம்மா! | |
| | கன்னலும் தேனும்முக் கனியும் கனிந்தொழுகிச் சொல்நயம் பொருள்நயம் தொடைநயம் பெருகவே | (இன்னிசைக்) |
| | பன்னரும் செய்தமிழின் பரிமளம் வீசஉன்றன் பொன்னடி போற்றிமாலை புனைந்துய்ய வேண்டிநின்றேன், | | |
|
|