முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 409 |
Untitled Document | | சின்னஞ்சிறிய பிள்ளைச் சீகாழிப் பிள்ளையைக்கண் டன்னையென அமுதம் அளித்த மகேச்வரியே! | (இன்னிசைக்) |
இராகம் - சங்கராபரணம் | | | தாளம் - சாபு |
1812 | | எப்பெயர் சொல்லி அழைப்பேன்! - ஏழை எளியேன் எங்குனைக் கண்டு தொழுவேன்! | |
| | அப்பனும் அம்மையுமாய் அனைத்துல கையுமீன்ற தற்பரமாம் பொருளே! சமயா தீதப் பொருளே! | (எப்பெயர்) |
| | ஓடி ஓடி அலைந்தேன் ஊர்பல சுற்றி வந்தேன்; தேடித் தேடி நிதமும் சிந்தை தளர்ந்து நின்றேன்; பாடிப் பாடி இனியுன் பதம்பெற ஆசை கொண்டேன்; ஈடும் எடுப்பு மிலா ஏக பரம் பொருளே! | (எப்பெயர்) |
| | காவியம் கற்றலுத்தேன், கதைகளும் கேட்டலுத்தேன்; மேவிய விதிமுறை விரதங்கள் காத்தலுத்தேன்; பூவினைப் பெய்துபல பூசைகள் செய்தலுத்தேன்; யாவுமாய் அல்லவுமாய் இருந்த பரம்பொருளே! | (எப்பெயர்) | |
|
|