பக்கம் எண் :

410கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  ஓதிய குருவிடம்
     உபதேசம் பெற்றலுத்தேன்;
போதனை செயவந்த
     புராணம் படித்தலுத்தேன்;
வாதுசெய் பண்டிதரின்
     வழக்கையும் கேட்டலுத்தேன்;
ஆதி அநாதியாகி
     அமர்ந்த பரம்பொருளே!
(எப்பெயர்)

29. சாந்தி பெறுவேனோ?

இராகம் - ஸிம்மேந்திர     மத்யமம் தாளம் - ரூபகம்

பல்லவி

1813 பாதை யறியாமல் - நின்று
     பரதவிக் கின்றேன் ஏழை
 

அநுபல்லவி

  வாதும் பெறாமையும்
     வஞ்சகமும் சூதமே
வேதனை செய்யுமிவ்
     வெய்ய வனந்தனில்
(பாதை)

சரணம்

  திங்களும் கங்கையும்
     சென்னியிற் சூடிய
மங்கையோர் பாகனே!
     வானோர் பெருமானே!
எங்குனைக் காண்பேனோ?
     என்றுன் பத நிழல்
தங்கியிருந்துப
     சாந்தி பெறுவேனோ?
(பாதை)