பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு411

Untitled Document
30. பெற்ற சுதந்திரம்

பல்லவி

1814 உன்னையே நம்பினேன் அம்மா! - உறுதுணையே
     றொருவரும் இல்லை அம்மா!
 

இராகம் - ஸாவேரி     தாளம் - ரூபகம்

அநுபல்லவி

  அன்னையே! அழகியே!
     அகிலாண்ட நாயகியே!
தென்னவர் குலவிளக்கே!
     தேவிமீ னாட்சியே!
(உன்னையை)

சரணம்

  முடிகொண்ட மன்னரெல்லாம்
     முடிந்து முழுகிப் போனார்,
குடிகண்ட ஆட்சியிலும்
     குழப்பம் ஒடுங்கிக் காணோம்,
வெடிகுண்டு வீசிமக்கள்
     விளையாடத் துணிந் திட்டார்,
பொடியுண் டழிந்திடாமல்
     புவனம் முழுதுங் காக்க
(உன்னையை)

  குற்றம் குறைக ளெல்லாம்
     குணமாக மாறுதற்குச்
சுற்றும் பகையை முற்றும்
     துரத்தி ஒடுக்குதற்கு
வெற்றி சிறப்பதற்கு
     வீரம் தழைப்ப தற்குப்
பெற்ற சுதந்தி ரத்தைப்
     பேணி வளர்ப்பதற்கு
(உன்னையை)